மின்னல் தாக்கி விவசாயி, இரண்டு மாடுகள் உயிரிழப்பு

இந்தியாவில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி மற்றும் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.

ஒத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த விவசாயி நேற்று புதன்கிழமை மாலை தனது வீட்டருகே உள்ள வயலில் பசுமாடு மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்