
நல்லையம்பதி கந்தனின் மஹோற்சவ திருவிழாவை முன்னிட்டு பத்திரிகை யாழ். மாநகரசபையிடம் கையளிப்பு
-யாழ் நிருபர்-
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு வெளிச் சுற்றாடல் செயற்பாடுகளை காத்திரமாக முன்னெடுக்கும் யாழ் மாநகரசபைக்கு இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தினரால், யாழ் மாநகர ஆணையாளர் ச.கிருஸ்ணேந்திரனிடம் சம்பிரதாயபூர்வமாக காலை 10 மணியளவில் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வையொட்டி யாழ்ப்பாண மாநகரசபை வாழை, தோரணங்களால் அலங்கரிக்கபட்டிருந்தது. இதில் யாழ்ப்பாண மாநகர சபை பணிநிலை உயர் அதிகாரிகள்,உத்தியோககர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
