சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகன புகை பரிசோதனை

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகன புகை பரிசோதனை இன்று புதன் கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றாடல் அதிகார சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸார் இணைந்து இன்று குறித்த செயற்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, A9 வீதியால் பயணித்த முச்சக்கர வண்டிகள், பேருந்துகள், பாரஊர்திகள் என அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்