சிறுவயதில் வீட்டை விட்டு ஓடி சிறை சென்ற காதல் ஜோடி : சிறையிலிருந்து வந்து மீண்டும் வீட்டை விட்டு ஓட்டம்

சிறுவயது காதலர்கள் நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும், மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணைகளையடுத்து, இளைஞனுக்கு 3 மாதகால சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், சிறுமியை சீர்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு கட்டளையிட்டது.

தண்டனைக் காலம் நிறைவடைந்து, தமது வீடுகளுக்கு திரும்பிய இவ்விருவரும், மீண்டும் தமது வீட்டை விட்டு வெளியேறி, யாழ்ப்பாணம் / கோப்பாய் பகுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்த பொலிஸார் இளைஞனையும் சிறுமியையும் மீண்டும் கைது செய்து, இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்