மோடியின் வெற்றிக்கு யாழில் சிதறுதேங்காய் உடைத்து கொண்டாட்டம்
இந்திய லோக்சபா தேர்தலில் மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கொண்டாட்டங்களை நடத்தியுள்ளன.
யாழில் உள்ள வைரவர் ஆலய முன்றலில் கற்பூரம் ஏற்றப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதுடன் சிதறுதேங்காய்களும் உடைக்கப்பட்டன.
பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு. பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்