நியூசிலாந்தில் உள்ள பிரா வேலியின் பின்னால் மறைந்துள்ள அதிர்ஸ்டம் என்ன தெரியுமா?

நியூசிலாந்து அமைதியான அழகான நாடு என பலராலும் அறியப்பட்டாலும் , ஆனால் ப்ரா வேலி இங்கு விசித்திரமான ஒன்றாகும். பறந்து விரிந்த இந்த உலகத்தில் ஏராளமான பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியின் மரபு, காலநிலை, வாழ்வியல் முறைக்கு ஏற்ப அவை மாறுபடும்.

நியூசிலாந்தின் வானகா மற்றும் குயின்ஸ்டவுன் இடையே கிரவுன் ரேஞ்ச் சாலையில் கார்ட்ரோனாவிற்கு அருகில் உள்ள வேலியில் அனைத்து வடிவங்களிலும் அளவுகளிலும் ப்ராக்களால் கட்டப்பட்டுள்ளது.

கார்டோனா பகுதிக்கு வரும் பெண்கள் தங்களின் பிராவை கழற்றி அங்குள்ள இரும்பு வேலியில் தொங்கவிட்டு செல்கின்றனர். அவ்வாறு அங்கு ஏராளமான உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

கார்டோனா பிரா வேலி காரணமாக இந்த பகுதி மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு வரும் பெண்கள் வேலியின் முன் நின்று தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளை கழற்றி வேலியில் தொங்கவிடுகின்றனர்.

இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா தளமாகவே பிரா வேலி மாறியுள்ளது.

1998 இல் கிறிஸ்துமஸுக்குப் பின்னர் பிராக்கள் வேலியில் தோன்றத் தொடங்கியதாகவும் , இந்த செயற்பாடானது அதிர்ஸ்டம் என ஆரம்பித்தது ஓரிரு வருடங்களில் நூற்றுக்கணக்கான உள்ளாடைகள் கம்பியில் பொருத்தப்பட்டன.

வீதி ஓரமாக அமைக்கப்பட்டிருந்து பிரா வேலியால் வாகன ஓட்டிகளின் பார்வை திசைமாறி விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவித்து உள்ளூர் கவுன்சில் 2006 ஆம் ஆண்டில் 1500 க்கும் மேற்பட்ட பிராக்களை அகற்ற உத்தரவிட்டது.

பெண்கள் இப்படி தங்கள் உள்ளாடைகளை இங்கு தொங்கவிட ஒரு காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இங்குள்ள கம்பி வேலியில் உள்ளாடையை தொங்கவிட்டால் தாங்கள் விரும்பும் நபர் வாழ்க்கை துணையாக கிடைப்பார் என்பது நம்பிக்கையால் வேலியில் உள்ளாடைகளை தொங்கவிடுவது வழக்கமாகிவிட்டது.

அதுமட்டுமன்றி சில மாதங்களுக்கு முன்பு வேலியில் தொங்கவிடப்பட்ட உள்ளாடைகள் திருடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி மேலும் பிரபலமடைய ஆரம்பித்துள்ளது.

முன்னதாக அப்பகுதி மக்கள் மட்டும் இதை செய்துவந்த நிலையில் தற்போது ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் இப்பகுதிக்கு சென்று தமது பிராக்களை கழற்றி வேலியில் தொங்கவிட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்