தூக்கிட்டு தற்கொலை செய்த பெண் காவலர்

இந்தியாவில் சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்டு 04 மாதங்களேயான நிலையில் பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த பெண் ராமபுரம் காவல் நிலையத்தில் ஒன்றாக பணியாற்றிவந்த சேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்ததாகவும், இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது குறித்த பெண் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்