இளைஞனை தாக்கி காயப்படுத்திய கல்முனை நகைக்கடை வர்த்தகருக்கு பயணத்தடை
கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டில் இளைஞனை தாக்கி காயப்படுத்திய நகைக்கடை வர்த்தகருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் மோதல் தொடர்பிலான குறித்த வழக்கு திங்கட்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பணம் வாதங்களின் அடிப்படையில் குறித்த இளைஞனை தாக்கி பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபரான நகைக்கடை உரிமையாளருக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் தாக்குதலில் ஈடுபட்டு தற்போது வரை தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு கல்முனை தலைமையக பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆந் திகதி வரை நீதிவான் ஒத்தி வைத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்