
லொறி மோதி 82 வயது மூதாட்டி உயிரிழப்பு
குருணாகல் இமதுராகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகல் – மாத்தளை வீதியில் லிஹினிவெஹெர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுராகொட பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் இரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய மூதாட்டியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாத்தளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர் ரிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் ரிதிகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
