மின்சாரக் கட்டணம் குறையுமா?

மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைக்க வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.