
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட பகத் பாசில்
மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவர் தமிழில் வேலைக்காரன், சுப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் தெலுங்கில் இவர் நடித்த பல கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், அண்மையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட பகத் பாசில் தனக்கு அரியவகை நோய் இருப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
பகத் பாசில் ADHD எனும் கவனக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பகத் வைத்தியர்களிடம் வினவியுள்ளார். அதற்கு வைத்தியர்கள் சிறுவயதிலேயே அதனை கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நரம்பியல் தொடர்பான குறைபாடு இருக்கும் ஒருவர் அதிக மறதி கொண்டவராகவும், ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை பெரிதாக கருதாதவர்களாகவும் இருப்பார்களாம்.
தனக்கு இருக்கும் குறையை பற்றி வெளிப்படையாக பகத் பாசில் பேசியுள்ளமை இரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
