190 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் நிறுத்தம்

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் 190 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

146 பாடசாலை பரீட்சாத்திகள், 44 தனியார் பரீட்சாத்திகளின் பெறுபேறுகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 269,613 பரீட்சாத்திகளில் 173,444 பேர் (64.33%) பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது.