ஆணொருவர் பீர் போத்தலினால் அடித்து கொலை

இந்தியாவில் சென்னையில் நேற்று வியாழக்கிழமை ஆண்ணொருவர் பீர் போத்தலினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஆண் தனது சகோதரனின் கடையில் வேலை செய்து முடித்ததும், மது அருந்தி விட்டு தூக்கத்தில் இருந்த நிலையில், அங்கு போதையில் வந்த கூலி தொழிலாளி குறித்த ஆணை தட்டியெழுப்பியதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதில் கோபமடைந்த கூலி தொழிலாளி பீர் போத்தலினால் குறித்த ஆணை அடித்து கொலை செய்துள்ளதுடன், சந்தேக நபர் தலைமறைவாகிவிட்டார் என தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்