இலங்கை – அயர்லாந்து மோதும் இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்கேற்கும் இரண்டாவது பயிற்சிப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் குறித்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நெதர்லாந்திற்கு எதிராக நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை அணி D குழுவின் கீழ் போட்டியிடவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்