வேன் தடம் புரண்டு விபத்து

-மூதூர் நிருபர்-

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள இன்று வியாழக்கிழமை அதிகாலை வாய்க்காலுக்குள் வேன் வாகனமொன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதோடு அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

மூதூரைச் சேர்ந்த குறித்த வேன் தோப்பூருக்கு சென்று மீண்டும் மூதூருக்குத் திரும்பும் வழியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்