
கிழக்கு ஆளுநரை சந்தித்த இம்ரான்
கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கவுள்ள ஆசிரியர் நியமன சர்ச்சை தொடர்பாக கிழக்கு ஆளுநரை சந்தித்தார் இம்ரான் எம்.பி
கிழக்கு மாகாணத்தில் நேற்று செவ்வாய் கிழமை வழங்கப்பட இருந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக ஆசிரியர் நேர் முகப்பரீட்சைக்கு தோற்றிய பல விண்ணப்பதாரிகள் இம்ரான் எம். பி யின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்த இம்ரான் எம் . பி நியமமத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன் பொழுது ஆளுநரினால் எந்த ஒரு விண்ணப்பதாரிகளுக்கும் பாதிப்பு இல்லாதவாறு ஆசிரியர் நியமனம் சில நாட்கள் தாமதமாகினாலும் விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கிள்ளதாக ஆளுநர் தெரிவித்ததாக பா.உ.இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
