மாத்தறையில் துப்பாக்கிச் சூடு
மாத்தறை வெலிகம, படவல, பத்தேகம ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்