அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்

டெல்லியில் இருந்து 135 பேருடன் லடாக் நோக்கிப் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதன் காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதே வாரத்தில் துபாயில் இருந்து மும்பை வந்த போயிங் 777 விமானத்தில் மோதி, 39 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்