மீண்டும் வாகன இறக்குமதி

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவினருக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை எனவும் வர்த்தக நோக்கத்திற்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கே இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்