மட்டக்களப்பில் துபாக்கி ரவைகள் மீட்பு

மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை தனியார் காணியில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கிக்கு அருகில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் துப்பரவு செய்யும் பணியில் ஈடபட்டிருந்த போதே குறித்த துப்பாக்கி ரவைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காணியின் உரிமையாளரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸாரினால் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது 58 ரி.56 வகை துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்