பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் பலி
இரத்தினபுரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஈரியகஹமட பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் வீட்டுக்கு அருகில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றிலேயே சிறுவன் வீழ்ந்துள்ளதாக தெரிவிவக்கபட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்