வாகன விபத்து: ஒருவர் பலி
தம்புள்ளை – திகம்பத்தஹா முகாமிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற கெப் ரக வாகனமும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்