வாகன விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கிம்புலாவல பிரதேசத்தில் புதிய வைத்தியசாலை இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மிரிஹான, மாதிவெல பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இருவரையும் ஜெயவர்த்தனபுர மற்றும் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இவர்கள் உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களின் கவனக்குறைவே இந்த விபத்துக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்