விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார்சைக்கிளை செலுத்திய 12 பேர் கைது

கொழும்பில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 12 பேர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி – கொழும்பு பிரதான வீதியின் டுப்ளிகேசன் வீதியில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளை செலுத்துவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது இருபது வகையான மோட்டார்சைக்கிள்களை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்