மகாவலி ஆற்றின் கரையோரங்களில் மரங்களை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்
இலங்கை மகாவலி அதிகாரசபையானது மகாவலி ஆற்றின் கரையோரங்களில் மரங்களை நடும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதன்படி நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை பேராதனை பல்கலைக்கழக ஜீரோ பிளாஸ்டிக் மன்றத்தின் முயற்சியினால் பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் தேனீ மற்றும் கும்பக் தோட்டத்தில் ப்ளு பிளான்டேஸன் (flu plantation) செய்யப்பட்டது.
பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் இலங்கை மகாவலி அதிகார சபை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி நில்மினி ஏகநாயக்க, பேராதனை பல்கலைக்கழக ஜீரோ பிளாஸ்டிக் சங்கத்தின் ஆட்சியாளர் செனல் வீரசூரிய, பல்கலைக்கழக விடுதியின் ஆளுநர் திருமதி காந்தி ஹெட்டிகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்