
ஜம்மியத்துல் ஷபாப் அமைப்பினால் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
-மூதூர் நிருபர்-
ஜம்மியத்துல் ஷபாப் அமைப்பினால் திருகோணமலை -தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு புனித நோன்பில் நடாத்தப்பட்ட 10 நாட்களைக் கொண்ட பயிற்சி நெறியின் நிறைவினையொட்டி குறித்த பயிற்சி வகுப்பில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தோப்பூர் -ஹைறாத் ஜும்ஆ பள்ளிவாயலில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பயிற்சியின் நிறைவில் நடாத்தப்பட்ட கேள்வி பதிலில் சிறந்த புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு விசேட பணிப்பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பயிற்சி நெறியை நடாத்திய ஆசிரியர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பாடநெறியானது நாட்டுப்பற்று, பண்பாடு, அகீதா,பிக்ஹுல் இஸ்லாமி உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றிருந்தது.
இன்றைய நிகழ்வில் தோப்பூர் ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.சர்ஜீல் மௌலவி, தோப்பூர் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் ஏ.எல்.கலிலுர் ரஹ்மான், பள்ளிவாசல்களின் தலைவர்கள், உலமாக்கள் என்ன பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


