திருக்கோணேச்சரத்தின் 13 ஆம் திருவிழா

திருக்கோணேச்சரத்தின் 13 ஆம் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கக் காப்பாளர் சண்முகம் குகதாசன், அதன் நிர்வாக உறுப்பினர் கனகசுந்தரம் இலங்கேஸ்வரன், திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கப் பொருளாளர் இராசரத்தினம் கோகுலதாசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது 1000க்கும் மேற்பட்ட பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன்,எஸ். சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பாடசாலை மாணவர்கள், என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.