பல்கலை மாணவன் உயிரிழப்பு

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டில் பயின்று வரும் மாணவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக இன்றையதினம் பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.