உலகில் வயதான ஆண் மரணம்

உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை படைத்த வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா நேற்று செவ்வாய்க்கிழமை காலமானதாக அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கின்னஸ் உலக சாதனையால் 2022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா அறிவிக்கப்பட்ட நிலையில் இவர் தனது 114 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 பெப்ரவரி 4, அன்று 112 வயது மற்றும் 253 நாட்களான கின்னஸ் படி, உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதராக பெரெஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார்.