
முன்பகை: கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை
-மூதூர் நிருபர்-
திருகோணமலை பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு வீடொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈச்சிலம்பற்று – இலங்கைத்துறை பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா ராசா (வயது – 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
முன் பகையின் காரணமாக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே கூரிய ஆயுதங்களால் இத்தாக்குதலை மேற்கொண்டு, கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
