
சட்ட விரோத மணல் ஏற்றிச் சென்ற 4 வாகனங்களுடன் சாரதிகள் கைது
-யாழ் நிருபர்-
சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் உட்பட அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ – கோவிலாக்கண்டிப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்றையும் அதன் சாரதியையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை உரிய அனுமதிப் பத்திரம் இன்றியும் – அனுமதிப் பத்திரத்தில் மோசடி மேற்கொண்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


