
வாகன விபத்து: 7 பேர் படுகாயம்
இரத்தினபுரி பட்டுல்பான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டுல்பான பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறியும் வேனும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வேனில் பயணித்த இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதி இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
