பொலிஸ் நிலையத்திலிருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

காலி பொலிஸ் நிலைய அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று புதன் கிழமை அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காலி போபே வட்டரகபர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரும்இ காலி கொங்கஹா வீதி மைனாகொடவைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபருமே தப்பிச் சென்றுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.