
பெண்கள் தனியாகப் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடம்: இலங்கை முதலிடம்
2024 இல் பெண்கள் தனியாகப் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் “டைம்அவுட்” சஞ்சிகையில் பயண எழுத்தாளரான ஜெய்ன் ட்ரெயினர் (Jayne Trainor) செய்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2024 இல் பெண்கள் தனியாகப் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடத்தை டைம்அவுட் சஞ்சிகை வழங்கியுள்ளது.
ஜெய்ன் ட்ரெயினர் மிகவும் பிரபல்யமான தலையங்க ஆசிரியராவார். அவர்
ஃபோர்ப்ஸ் (Forbes), ஃபுடர்ஸ்(Fodor’s), சௌத் சைனா மோர்னிங் போஸ்ட்(South China Morning Post), ஏ.எஃப்.ஏ.ஆர்(AFAR), கவெரிஜ ட்ராவெல் (covering travel) மற்றும் புட் அன்ட் லக்ஜெரி கொட்டெல்ஸ் (food and luxury hotels) இதழ்களின் தலையங்க ஆசிரியராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
