
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் மாற்றம்
நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படவுள்ளது.
அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 625 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.
மேலும் 5 கிலோ சிலிண்டரின் விலை 248 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,652 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்ப்பட்டுள்ளது.
