
காதல் மோசடியில் சிக்கவிருந்த வெளிநாட்டு பெண்ணை காப்பாற்றிய இலங்கை பிரஜை
அவுஸ்திரேலிய வங்கியொன்றில் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர் மோசடியில் சிக்கி ஆயிரக்கணக்கான டொலர்களை இழக்கவிருந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளார்.
குறித்த பெண் நோய்வாய்ப்பட்டுள்ள தனது காதலனுக்கு ஆயிரக்கணக்கான டொலர்களை அனுப்ப முயன்ற வேளை குறித்த வங்கியில் பணிபுரியும் வாடிக்கையாளர் ஆலோசகர் டிலான் பத்திரன்னஹலகே அதனை தடுத்துள்ளார்.
60 வயதுடைய பெண் கடந்த பிப்ரவரி மாதம் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள க்ரான்போர்னில் உள்ள NAB வங்கி கிளைக்கு சென்றார். சமூக ஊடகத்தின் மூலம் அறிமுகமாகி காதல் உறவில் இருக்கும் தனது காதலனுக்கு இப்பெண் 2000 டொலர்களை வைப்பிலிட முயன்றார்.
துருக்கியில் வசிக்கும் தனது காதலன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல பணம் தேவைப்படுவதாகவும் குறித்த பெண் வாடிக்கையாளர் ஆலோசகர் டிலான் பத்திரன்னஹலகேவிடம் தெரிவிக்கின்றார்.
ஆனால் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதை டிலான் அறிகின்றார்.
இது தொடர்பில் டிலான் தெரிவிக்கையில் ,
‘ அந்த கணக்கு முடக்கப்பட்டிருந்ததால் அப்பெண்ணின் காதலன் வேறொரு நபரின் கணக்கு இலக்கத்தை கொடுத்து அதற்கு அனுப்புமாறும் தான் அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அந்த பெண்ணிற்கு பணம் பெறப்போகும் நபரின் பெயர் குடும்ப பெயர் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதை அறிந்த போது நான் விழித்துக்கொண்டேன். ஏனெனில் அந்த பெண் ஏமாற்றப்படுகிறார் என்பதை நான் கண்டுபிடித்தேன், என்று தெரிவித்துள்ளார்.
அவள் யாருக்கு நிதியை மாற்றுகிறாள் என்று அவளுக்குத் தெரியாததற்குக் காரணம் அவள் தன் காதலன் என்று நினைத்த அந்த மறுமுனையில் இருக்கும் நபரை அவள் சந்திக்கவில்லை அதனால் அவர்களுடைய நண்பர்களையும் அறியவில்லை, என டிலான் மேலும் குறிப்பிட்டார்.
அதன் பின் அந்த பெண் அந்தப் பெண் தனது காதலனுடன் உரையாடிய குறுஞ்செய்திகளை டிலானிடம் காட்டி கவலைப்பட்டு பேசியுள்ளார்.
எனினும் இந்த குறுஞ்செய்திகளை பார்த்த டிலானிற்கு சந்தேகம் வலுத்தது.
வங்கியில் டிலானிடம் பேசிக் கொண்டிருந்த போது அந்த பெண்ணின் காதலன் பெண்ணை அழைத்து பணத்தை எப்போது மாற்றுகிறீர்கள் என்று கேட்கிறார்.
இது ஒரு மோசடி என்று தெரிந்த பின் அந்த பெண்ணை பணத்தை வைப்பிலிடாமல் தடுக்க நான் மிகவும் கடினமாக போராட வேண்டியிருந்தது என டிலான் தெரிவித்தார்.
அதன்பின் குறித்த பெண்ணை சமாதானப்படுத்தி அவருக்கு புரிய வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் இலங்கை பிரஜையான டிலான் பாரிய மோசடி ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்ற
கடந்த ஆண்டு 400 க்கும் மேற்பட்ட காதல் மோசடிகள் பற்றிய புகார்கள் அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளதுடன் இதில் 40 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான காதல் மோசடிகளின் வாடிக்கையாளர் அறிக்கைகள் ஆண்டுக்கு ஆண்டு 29 சதவீதம் அதிகரித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது
