பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்: 2 மாணவிகள் உட்பட 7 பேர் கைது

பதுளை வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

5 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு ​​குறித்த கைவிடப்பட்ட கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை இந்த பாடசாலை மாணவர்கள் அப்போது அருந்திக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.