
எரிபொருள் விலை குறைப்பு?
எரிபொருள் விலையில் நாளை திங்கட் கிழமை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் கடந்த 4ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 447 ரூபாவாக அறிவிக்கப்பட்டது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 458 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 257 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒக்டேன் 92 பெற்றோலின் விலை மற்றும் ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
