பாடசாலை இல்ல அலங்காரம்: விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்

-யாழ் நிருபர்-

யாழ்பாணத்தில் கார்த்திகைப்பூ இல்ல அலங்காரம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பிலேயே விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை சமூகத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.