
காரைநகரில் சிறப்புற நடைபெற்ற மகளிர் தினம்
-யாழ் நிருபர்-
சர்வதேச மகளிர் தினம் இன்றையதினம் ஞாயிற்று கிழமை வெகு விமரிசையாக காரைநகர் கசூரினா கடற்கரையில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பரமானந்தம் தவமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக காரை நகர் பிரதேச செயலக செயலாளர் கலந்து கொண்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது பாரியாரும், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரன், முன்னாள் காரைநகர் பிரதேசசபை உப தவிசாளர் விஜயராசா மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


