
தடுப்பூசி செலுத்தப்பட்ட நோயாளி மரணம்: விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு ராகம போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணைகள் வைத்தியசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.
கோ அமோக்சிக்லாவ் எனும் தடுப்பூசியைச் செலுத்தியதன் பின்னர் குறித்த நோயாளி உயிரிழந்தார்.
எனினும் தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குறித்த மரணம் ஏற்பட்டதா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
