
உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்: காப்பாற்றிய இளைஞர்கள்
ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளம் பெண்ணை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது.
மினிபே – 31 கால்வாய் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரே, நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் மஹியங்கனை – கண்டி வீதியில் மகாவலி ஆற்றின் வேரகங்தொட்ட பாலத்தில் இருந்து குறித்த ஆற்றில் குதிக்க முயற்சித்துள்ளார்.
இதன்போது குறித்த யுவதியை அவதானித்த அருகில் இருந்த இளைஞர்கள் குழு ஒன்று, அவரை காப்பாற்ற ஓடி வந்த போது குறித்த யுவதி ஆற்றில் குதித்துள்ளார்.
பின்னர், இளைஞர்கள் குழு பெண்ணை ஆற்றில் இருந்து மீட்டு மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பெண் பாலத்திற்கு வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது கைப்பேசி என்பன பாலத்தின் மேல் இருந்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
