“இலக்கியத்தடங்களில் கடாட்சம்” நூல் வெளியீடு

-மூதூர் நிருபர்-

சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இலக்கிய வித்தகர் ,திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் தேவகடாட்சம் அவர்களின் வாழ்தல் குறிப்புகளை தாங்கிய “இலக்கியத்தடங்களில் கடாட்சம்” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வும் எழுத்தாளர் பாராட்டு நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை பொதுநூலக கேட்போர் கூடத்தில் சம்பூர் தமிழ்க்கலாமன்ற தலைவர் மருத்துவ கலாநிதி ஸதீஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நூல் வெளியீடு மற்றும் ஆர்வலர்களின் கருத்துரை மற்றும் தமிழ்க்கலாமன்ற உறுப்பினர்களின் இசை நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் எழுத்தாளர் தேவகடாட்சம் இலக்கிய ஆர்வலர்கள் பலராலும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருமணம் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கதாகும்.