
மகனின் தாக்குதலில் தந்தை மரணம்
-பதுளை நிருபர்-
பதுளை ஹாலிஎல பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை பலியானதுடன் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலவுட கொடுன்ன பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறியதில் குறித்த நபர் உயிரிழந்து உள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கலவுட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
