மட்டக்களப்பு காத்தான்குடியில் பேருந்து விபத்து: 2 பேர் படுகாயம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று சனிக்கிழமை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட இருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ஆம் கட்டை பகுதியில் அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து 4ஆம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்குள் நுளைந்துள்ளது.

விபத்தில் சாரதி உட்பட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது, விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.