
கஞ்சா விற்பனை: பெண் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (வயது – 38) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கஞ்சா போதை பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
சந்தேக நபரிடம் இருந்து 52160 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
