மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரான் குளம் பகுதியை சேர்ந்த சீனிதம்பி ராசரெட்ணம் (வயது – 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட சடலம்: அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை (செய்தியின் update)