
முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை
நுவரெலியா பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்தாகவும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
