
பெண்கள் கூடுதலான காலத்தை மற்றவர்களுக்காகவே செலவழிக்கிறார்கள்: ஏ.எஸ்.அருள்ராஜ்
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
உன்னிப்பாகக் கவனித்தால் பெண்கள் தங்களது வாழ்க்கைக் காலத்தின் பெரும்பாலான பகுதியை மற்றவர்களுக்காகவே அர்ப்பணித்திருப்பதை அவதானிக்க முடியும் இதுவொரு உயர்ந்தபட்சதியாகமாகும் என திருகோணமலைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட பெண்கள் செயலணியினரின்பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வுகற்றல் ஒன்று கூடல் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றினார்.
திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் திருகோணமலை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர்சுவர்ணா தீபானி தலைமையில் மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்வு இடம்பெற்றது.
சுவீடன் சர்வதேசஅபிவிருத்திக்கான ஒத்துழைப்பு(வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதிஅனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் தொடர்ந்துஉரையாற்றிய மாவட்டமேலதிக அரசாங்கஅதிபர் அருள்ராஜ்,
வீடு, அலுவலகம், பொதுத் தொண்டுஎன்று பெண்களின் பணியும் பங்கும் பாத்திரமும் தியாகத்துடன்கூடியது. தமதுசொந்த நலன்களைப்புறந்தள்ளி விட்டு அடுத்தவர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து அடுத்தவர்களுக்காகவே சிந்தித்து அடுத்தவர்களுக்காகவே ஓய்வின்றி உழைத்து உருக்குலைந்து போகும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இல்லை.
எனவே அவர்களுக்கும் இந்த மானுடப்பிறவியில் மகிழ்ச்சியும் ஓய்வும் உடல் ஆரோக்கியமும் உரிமைகளும்தேவை. பொருளாதாரச்சுமை குடும்பச்சுமை உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே சுமக்க வேண்டியுள்ளது.
எனவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் இல்லாமலாக்கி பெண்களை ஆளுமை மிக்கவர்களாக வலுவூட்டுவதற்கு முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்”என்றார்.
இந்நிகழ்வுகளில் திருகோணமலைமாவட்ட செயலகஅலுவலர்கள், பெண்கள்அபிவிருத்தி அலுவலர்கள்,மாவட்ட பெண்கள்செயலணித் தலைவிஎச்.டபிள்யூ.சுஜாதா, இளைஞர்அபிவிருத்தி அகம்நிறுவனத்தின் களப்பணியாளர்களான பி.சற்சிவானந்தம், ஜே.தவமுரளி, வி. மோகன் உள்ளிட்டோரும்கலந்து கொண்டனர்.
ஒன்று கூடல்அனுபப் பகிர்வுநிகழ்வில் கலைஅம்சங்களும் கேள்விபதில் போட்டிகளும்,தனி குழுநடனங்களும் விருதுவழங்கலும் இடம்பெற்றன.இளைஞர் அபிவிருத்திஅகம் நிறுவனம்2012ஆம் ஆண்டிலிருந்துசுவீடன் சர்வதேசஅபிவிருத்திக்கான ஒத்துழைப்பு(வீ எபெக்ற்)நிறுவனத்தின் நிதிஅனுசரணையோடு கிழக்குமாகாணத்தில் கூட்டுறவுத்துறைசார்ந்த திட்டங்களையும்,பெண்கள் வலுவூட்டலோடுஅபிவிருத்திகளை உறுதிப்படுத்தும்வகையில் பயிற்சிகள்,செயலமர்வுகள், விழிப்புணர்வுகள்,தொழில்துறை உற்பத்திக்கண்காட்சிகள், கற்றல்கள விஜயங்கள்,பொருளாதார வாழ்வாதாரஉதவு ஊக்கங்கள்என்பனவற்றை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



