அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 295 ரூபாய் 54 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 76 சதமாக காணப்பட்டது.

மேலும் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 305 ரூபாய் 33 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 306 ரூபாய் 34 சதமாக காணப்பட்டது.